Khuddaka Nikāya 9

எல்லையற்ற கருணை

செம்மையில் திறமை பெற்றவன் அந்த சாந்தியை அடைய விரும்பினால் இவ்வாறு செயல்புரிவானாக.

செயல் திறனும், நேர்மையும், பூரண நேர்மையும், அடக்கமும், செம்மையும், பணிவும், கொண்டிருக்க வேண்டும்.

போதுமென்ற மனம், எளிய வாழ்க்கை, அற்பக் கடமைகள், அற்பத் தேவைகள், புலனடக்கம், பகுத்தறியும் திறம், அமைவடக்கம், உடையவனாய்க் கூடிப் பிறந்தோரைப் பெரிதும் பின்தொடராதவனாயிருக்க வேண்டும்.

உயர்ந்த அறிவுள்ள மேலோர் பழிக்கும் இழிந்த செயல்களைக் கொஞ்சமும் செய்யாதிருப்பர். 'உயிர்களெல்லாம் சுகமடைவாராக.சேமமாயிருப்பாராக, அவர்கள் உள்ளம் இன்பமடைவதாக' எனப் பின்வருமாறு நினைப்பாராக, 'பலமற்றவையும், பலமுள்ளவையும், உயர்ந்தனவும், பருத்தனவும், நடுத்தரமானவும், குறுகினவும், சிறியவும், பெரியவும், கண்ணுக்கு தெரிவனவும், தெரியாதனவும், அண்மையில் உள்ளனவும், சேய்மையில் உள்ளனவும், பிறந்தனவும், பிறப்பனவும் ஆகிய எல்லா உயிர்களிடமும் இன்பமான உள்ளம் உடையனவாக.'

எவரும் எவரையும் வஞ்சிக்க வேண்டாம். எவரையும் எவ்வகையிலும் அவமதிக்க வேண்டாம். கோபத்தினாலோ மனக்கசப்பினாலோ எவரும் எவர்க்கும் தீமை நினைக்கவேண்டாம்.

தன்னுயிரைக் கொடுத்தேனும் ஒரு தாய் எவ்வாறு தன் ஏக புத்திரனைக் காப்பாற்றுவாளோ அவ்வாறே ஒருவன் மற்ற உயிர்களிடம் எல்லாம் எல்லையற்ற அன்பை வளர்ப்பானாக.

உலகம் முழுவதும் மேலேயும் கீழேயும் திசையெங்கும் தடையற்ற பகையற்ற குரோதமில்லாத எல்லையற்ற கருணையை வளர்ப்பானாக.

நிற்கும்போதும் நடக்கும்போதும் இருக்கும்போதும் கிடக்கும் போதும் ஒருவன் விழிப்பாயிருக்குங் காலத்தில் இந்த சதிபட்டான மென்ற கடைப்பிடியிருக் வேண்டும். இதைப் பிரம்மவிஹார நிலை எனக் கூறுவர்.

தவறாக தரிசனங்களைப் பின்பற்றாது, சீலமும் ஞானக் காட்சியுமுடையவராய் புலன்வரும் இன்பங்களைத் துறந்தவர் உண்மையில் கர்ப்பத்தில் மேலும் பிறவாநிலை அடைவார்.