சுத்த நிபாதம் 5.3

திஸ்ஸ மெத்திய்ய மாணவ பூச்சா சூத்திரம்: திஸ்ஸ மெத்திய்யரின் கேள்விகள்

திஸ்ஸ மெத்திய்யர்:

இந்த உலகில் திருப்தியுடன் வாழ்பவர் யார்?
யாரிடம் மனசஞ்சலம் இருப்பதில்லை?
எப்படிப்பட்ட சிந்தனையாளர் இரண்டு
எல்லைகளையும் (பக்கங்களையும்) தெரிந்தவராக,
அவற்றின் மத்தியில் நிலைத்திருப்பதில்லை?
மாமனிதர் என்று நீங்கள் கூறுவது யாரை?
இங்கு உள்ளவர் தையற்காரியை—வேட்கையைக்—கடந்து சென்றவர் யார்?

புத்தர்:
சிற்றின்பங்களுக்கு மத்தியில், புனித வாழ்வை மேற்கொள்பவர்,
எப்போதும் கடைப்பிடியுடன், வேட்கை இல்லாமல்;
விவேகத்துடன் கட்டவிழ்த்த (சுமையை இறக்கிய) துறவி:
அவருக்கு மனசஞ்சலம் இல்லை.

அவர், சிந்தனையாளர்—இரண்டு எல்லைகளையும் தெரிந்தவர்—
அவற்றின் மத்தியில் நிலைத்திருப்பதில்லை.
அவரையே மாமனிதர் என்கிறேன்.
தையற்காரியைக்—வேட்கையைக்—கடந்து சென்றவர் அவர்.